'சிறுதுளி பெருவெள்ளம்’ என்னும் பழமொழி நமக்கு எதனை உணர்த்துகிறது? சிறுசிறு முயற்சிகள் பெரிய சாதனைகளுக்கு காரணமாகின்றன என்ற உண்மையினைக்காட்டி நிற்கின்றது. சிறுதுளிகள் பெருவெள்ளமாவது போலச் சிறுகச் சிறுகச் சேமித்து வந்தால் அது நாளடைவில் பெரும் செல்வமாகும் என்ற உண்மையையும் இப் பழமொழி நமக்குப் புலப்படுத்துகிறது.நம் வாழ்க்கையானது இன்று பணத்தை மையமாகக் கொண்டே சுழல்கிறது. நம் அன்றாட வாழ்வில் இதனைக் கண்கூடாகக் காண்கிறோம். அதனால் தான் ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்பார்கள். பணத்தின் அருமை கருதியே ‘பணம் பத்தும் …

