“இளைஞர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? நமது குரல்கள் நாட்டை எவ்வாறு வடிவமைக்க முடியும்…?”

இலங்கை மற்றுமொரு முக்கிய ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், நாடு ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை. பொருளாதாரப் போராட்டங்கள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமூகப் பதட்டங்கள் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் எடுக்கப்படும் முடிவுகள் நமது தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் இளைஞர்களுக்கு, இது வெறும் மற்றுமொரு தேர்தல் மட்டுமல்ல; நமது விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான நமது பார்வையைப் பிரதிபலிக்கும் ஒரு நாட்டை உருவாக்கும் …