பாராளுமன்றம் என்பது எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத்தின் அடிப்படை தூணாக கருதப்படுகிறது. இலங்கையிலும் பாராளுமன்றம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. பாராளுமன்றம் என்பது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாகும். அது மட்டுமே சட்டமன்ற மேலாதிக்கத்தை கொண்டுள்ளதுடன் மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை பயன்படுத்தும் இறுதி அதிகாரம் கொண்ட மன்றமாகும். இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பின் கீழே சுயாதீனமான ஒரு சட்டத்துறையாகிய பாராளுமன்றம் உருவாக்கபட்டமை சிறப்பம்சம் …

