‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்னும் பழமொழி நமக்கு எதனை உணர்த்துகிறது? சிறுசிறு முயற்சிகள் பெரிய சாதனைகளுக்கு காரணமாகின்றன என்ற உண்மையினைக்காட்டி நிற்கின்றது.
சிறுதுளிகள் பெருவெள்ளமாவது போலச் சிறுகச் சிறுகச் சேமித்து வந்தால் அது நாளடைவில் பெரும் செல்வமாகும் என்ற உண்மையையும் இப் பழமொழி நமக்குப் புலப்படுத்துகிறது.
நம் வாழ்க்கையானது இன்று பணத்தை மையமாகக் கொண்டே சுழல்கிறது. நம் அன்றாட வாழ்வில் இதனைக் கண்கூடாகக் காண்கிறோம். அதனால் தான் ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்பார்கள்.
பணத்தின் அருமை கருதியே ‘பணம் பத்தும் செய்யும்’, ‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்றார்கள். இன்றைய உலகில் செலவு இல்லாத மனிதரே இல்லை எனலாம். பணம் சேமிப்பதே செலவு செய்வதற்காகத்தான். அன்றாட செலவுகளுக்கு அதிக பணம் தேவையில்லாதிருக்கலாம். ஆனால் திடீர்ச் செலவுகளுக்கு எப்போதும் பணம் கையிலிருக்க வேண்டும். சேமிப்பு இருந்தால் தான் இது சாத்தியமாகும். திடீர் செலவுகளுக்கு மட்டுமின்றி இல்ல நிர்மாணம், திருமணம் போன்ற எதிர்கால தேவைகளை எதிர்கொள்ளவும் சேமிப்பு அவசியமாகின்றது.
நாம் சிறுகச் சிறுகச் சேமித்தாற்றான் இது சாத்தியமாகும்.
மலையிலிருந்து ஊற்றெடுத்து வரும் ஆற்று நீரை அணைகட்டித் தேக்காது அதன் போக்கில் விட்;டுவிட்டால் நீர் மண்ணுக்கும் மரத்துக்கும் பயன்படாமல் வீணாகும். அது போலவே பணத்தைச் சேமிக்காமல் செலவு செய்தால் அதுவும் பயன்தராது வீணாகிவிடும். வெள்ளத்தைத் தேக்க அணைகட்டியிருந்தால் அதனைத் தேவைக்கேற்ப தேக்கி பயன்படுத்தலாம். தேவையறிந்து திறந்து விடலாம். அதே போல் பணத்தை நாம் சேமித்து வைத்திருந்தால் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். நீரைத்தேக்க அணை அமைக்கத் திட்டமிடல் அவசியம். அது போலவே பணம் சேர்க்கத் திடடமடடுலும் அவசியமாகின்றது.
சேமிப்பின் பயன்கள் எண்ணற்றவை சேமிப்பு இருக்குமானால் திடீர்ச் செலவுகளை எதிர்கொள்ள முடியும். சேமிப்பு இருந்தால் பயம் இல்லை. வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ பணமே இன்று அடிப்படையாக அமைந்துள்ளது. சிறுகச் சிறுகப் பணம் சேமிப்பதன் மூலம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் செலவினங்களைச் எதிர்கொள்ள முடியும்.
சேமிப்பதற்கு இன்று பல வழிகள் உள்ளன. வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை ஆரம்பிப்பதற்கு வழிகளுண்டு. பாடுசாலைகளிலும் கூட வங்கி;கள் மாணவர்கள் சேமிப்புக்கணக்குகளை ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிக்கின்றன. அதற்காகப் பல ஊக்குவிப்புப் பரிசில்களையும் வழங்குகின்றன. வங்கியில் நிலையான வைப்பு நிதியாகப் பெரும் பணம் போட்டுச் சேமிப்பைச் செம்மைப்படுத்தலாம்.
நாம் நாளாந்தச் செலவுகளைக குறைக்க பழக வேண்டும். மனமுண்டுhனால் இடமுண்டு. செலவு செய்ய முன் சிநதித்துச் செய்ய வேண்டும். சிந்தித்துச் செலவு செய்வோமாயின் செலவினைச் சுருக்கிக் கொள்ள முடியும். சிறுகச் சிறுகச் சேர்க்கும் தேனீக்களைப் போல நாமும் சிறுகச் சிறுகப் பணத்தை சேமிக்கவேண்டும்.
சிறிய எறும்புகளைப் பாருங்கள். அவை மழைக்காலத் தேவைக்கான உணவை வெயிற் காலத்திலேயே சேமித்து விடுகின்றன. அவையும் நமக்கு ஒர் பாடம் கற்பிக்கின்றன.
இவற்றுக்கான அடிப்பiடு எமது தாய்மாரிடுமிருந்தே ஆரம்பமாக வேண்டும். கருவறையிலிருந்தே பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான முதலீட்டைப் பெற்றோர்கள் ஆரம்பிக்க வேண்டும். சிறுவயது முதலே சேமிப்பின் முக்கியத்துவத்தினை புகட்டி ‘உண்டியல்’ சேமிப்பை அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்கால சிந்தனையோடு வாழ்ந்தாலே நாம் முன்னேற முடியும் என்ற உண்மையை நாம் உணருவதோடு பிள்ளைகளையும் உணரச் செய்ய வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என நாமும் சேமிக்க முற்பட்டால் நாமும் நாடும் நலம்பெறுவது திண்ணம்.
Penned by : Lacksika Sivaskaran, 1st year- Faculty of Law.



