அந்த இரவு, ஒருவர் ஓடி திரிகிறார். மிகவும் பதற்றத்துடன் இங்கும் அங்கும் ஓடும் அவரின் மன நிலையோ குழப்பம் நிறைந்தது. வீட்டுக்குள் ஒரே சத்தம்- இரண்டு அழுகுரல்களில் பெரியவரின் குரல் நின்று, சிரிக்கும் குழந்தையின் சத்தம் மட்டுமே நீடிக்கிறது. நுழைந்து பார்த்தபோது, இரண்டு பெண்களும் அழுது கொண்டிருந்தனர். அவர்களைத் தந்தை கட்டியணைத்துப் பார்த்தபோது, ஒருவரும், இன்னொருவரும் கண்ணீரில் கனிந்த பெண்கள். ஆனால் பார்வையில் குழப்பமும் சந்தேகமும்: பக்கத்தவர்களோ “பெண் குழந்தையா?” என்ற கேள்வியோடு புன்னகை இல்லாத பார்வை. அவர்களுக்கு மட்டுமல்ல அக் குழந்தையை ஈன்றெடுத்தவர்களுக்கும் அதே பார்வை.
இருவருக்கும் பிள்ளை பிறந்த மகிழ்ச்சி இருந்தபோதும், அது பெண் குழந்தையென்ற ஒரே காரணத்திற்காகக் குழப்பம், சந்தேகம், ஏமாற்றம். இது எதனை காட்டுகிறது? பெண்ணாக பிறப்பதே ஒரு குறையா? பெண்ணின் இயற்கை நிலைமைகள், மாதவிடாய் போன்ற சிகிச்சைகள், அவளது உயிரின் ஒரு பகுதி என்று அறிந்து கொள்ளாமல், அவளைத் தவறான பார்வையுடன் காணும் சமூகத்தின் நிலையையே. இது நடந்ததோ ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னரே. அதனால் இன்று அது முழுமையாக மாறிவிட்டது என்று கூறி விட முடியாது.
மாதவிடாய் என்பது ஒரு பெண் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாகக் கருதப்படும், இயற்கையான மற்றும் அவசியமான உடலியல் செயல்பாடாகும். இது ஒரு இயற்கையின் அற்புதம் என்று சொல்லப்பட வேண்டும். பொதுவாக 10-16 வயதுக்கு இடையில் பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பமாகிறது. இது ஒரு பெண்ணின் இனப்பெருக்கத்திற்கான முன்னோட்டமாகும்.
இது இயற்கையானது என்றாலும், உலகின் பல சமூகங்களில் இது இன்னும் மௌனம், களங்கம் மற்றும் தவறான தகவல்களின் வழியில் சூழப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் தென்னாசியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய பல சமூகங்களில், மாதவிடாய் குறித்து திறந்த முறையில் பேசுவது இன்னும் தடை செய்யப்பட்ட விஷயமாகவே இருக்கிறது. இதனால் பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு எதிரான பல தீமைகள் உருவாகின்றன. இவ் வீச்சாய்வு, மாதவிடாயை ஒரு உடலியல் செயலாக மட்டுமல்லாமல், ஒரு சமூக மற்றும் உளவியல் அனுபவமாகவும் ஆராய்கிறது. மேலும், இதன் உடல்நல நன்மைகள், உணர்ச்சிப் பாதிப்புகள் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் அவசியம் குறித்து விவாதிக்கிறது, மாதவிடாய் மீது மரியாதையும் புரிதலும் ஏற்படுவதற்காக.
மாதவிடாயின் உடல்நல நன்மைகள்:
மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை ஏதோ பெரும் குற்றம் செய்தாற் போல் பார்க்கும் இந்த சமூகத்திற்கு தெரியவில்லை அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி, மாதவிடாய் என்பது இயற்கையான உடல் செயல்முறையாக இருந்தாலும், நம்முடைய சமுதாயத்தில் இது இன்னும் நிறைய தவறான கருத்துகளுடன் பார்க்கப்படுகிறது. உண்மையில், இது ஒரு பெண்ணின் உடல்நலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் செயலாகும். மாதவிடாயின் ஒழுங்கான நிகழ்வு, பல உடல் உறுப்புகள் சீராக இயங்குவதையும், கருத்தரிப்பு திறனையும், ஆரோக்கிய நிலையை பராமரிப்பதையும் விவரிக்கிறது. கீழே, மாதவிடாயின் முக்கியமான உடல்நல நன்மைகள் குறித்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
- மாதவிடாய் ஓமோன்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்கிறது.
மாதவிடாய் ஒழுங்காக வருவது, ஓமோன் சமநிலை (நுளவசழபநnஇ Pசழபநளவநசழநெ), மற்றும் கர்ப்பப்பை-சூல்குறி ஆரோக்கியத்தை காட்டுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய், Pஊழுளு (pழடலஉலளவiஉ ழஎயசல ளலனெசழஅந)இ தைரொய்ட்டு பிரச்சினைகள் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. மேலும் எஸ்ட்ரோஜன் ஓமோன் எலும்பு அடர்த்தி, இதய ஆரோக்கியம் மற்றும் தோல் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க உதவுகின்றது. ஒழுங்கான மாதவிடாய் சுழற்சி, இந்த ஓமோன்களை சீரான மட்டத்தில் வைத்து, நீண்ட கால ஆரோக்கியத்தை தருகிறது. - சில ஆராய்ச்சிகள் மாதவிடாயின் போது உடலிலிருந்து வெளியேறும் நீர்சேமிப்புகள் மற்றும் கழிவுகள் சில நோய்களைத் தடுக்கக்கூடும் எனவும் கூறுகின்றன.
அதாவது, மாதவிடாயின் போது கர்ப்பப்பையின் உள்புற சவ்வு (நுனெழஅநவசரைஅ) சரிந்து விடுவது, பழைய திசுக்கள் சேகரிப்பதை தடுக்கிறது. இது தொற்று அல்லது கருமையாதல் (குiடிசழளளை) போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், கருத்தரிப்பதற்கு புதிய, ஊட்டச்சத்து நிறைந்த சூழலை உருவாக்குகிறது. மேலும் மாதவிடாய் இரத்தப்போக்கு, உடலில் அதிக இரும்புச்சத்து சேர்வதை (hநஅழஉhசழஅயவiஉள) தடுக்கும். ஆனால், அதிக இரத்தப்போக்கு இரும்புச்சத்து குறைபாட்டு இரத்தசோகைக்கு (யநெஅயை) வழிவகுக்கும். - குழந்தைப் பெறும் திறனை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாக உள்ளது.
மாதவிடாய் சுழற்சியை கண்காணிப்பதன் மூலம், கர்ப்பத்தடை அல்லது கருத்தரிப்பு திட்டமிடலை கட்டுப்படுத்தலாம். இது இயற்கையான குடும்பத் திட்டமிடல் முறைகளுக்கு உதவுகிறது. - சுரப்பி அமைப்புகள், இரத்த ஓட்டம் போன்றவை இயல்பாக இயங்க உதவுகிறது.
மாதவிடாய் மற்றும் மனவளத்திற்கான தாக்கங்கள்:
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் உடல் நலத்திலும், இனப் பெருக்கத்திற்கும் அடிப்படையாக இருந்தாலும், சமூகத்திலும், மன நலத்திலும் அதன் தாக்கம் பெரிதாக காணப்படுகிறது. இன்று வரை பல சமூகங்களில் மாதவிடாய் குறித்து பேசுவது ஒரு தடைபட்ட விஷயமாகவே இருந்து வருகிறது. இதனால், மாதவிடாயைச் சுற்றியுள்ள உடல் மற்றும் மன நிலை மாற்றங்கள் சரியான வகையில் புரிந்துகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் ஓமோன்கள் குறைவு மற்றும் மாறுபாடுகள், பெண்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடியவை. Pஆளு (Pசநஅநளெவசரயட ளுலனெசழஅந)இ Pஆனுனு (Pசநஅநளெவசரயட னுலளிhழசiஉ னுளைழசனநச) போன்ற நிலைகள் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் மனநல சிக்கல்களாக உள்ளன. இவை மனச்சோர்வு, எரிச்சல், துக்கம், பதற்றம் போன்ற பல அறிகுறிகளை உருவாக்குகின்றன. இத்துடன் சமூகத்தில் நிலவும் மாதவிடாய் குறித்த தவறான எண்ணங்கள், பெண்கள் தனிமைபடும் சூழலையும் உருவாக்குகின்றன.
எனவே, மாதவிடாய் என்பது ஒரு உடலியல் மாற்றம் மட்டுமல்லாமல், அது பெண்களின் மனநலத்திற்கும் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பது தெளிவாக வேண்டும். இதனை மனநலம், சமூக நிலை மற்றும் மருத்துவ அடிப்படையில் ஆராய்ந்து, உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகமாக உள்ளது.
- மன அழுத்தம், மனதளவில் குழப்பம், அலட்சியம், விரக்தி போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.
• எஸ்ட்ரோஜன் மனநிலையை சீராக்கும் “செரோடோனின்” (ளநசழவழnin) எனும் நரம்பியல் சார்பியை அதிகரிக்கிறது. ப்ரோஜெஸ்டிரோன் அமைதியை தரும். ஆனால், மாதவிடாய் முன் கட்டத்தில் (டரவநயட கட்டம்) இந்த ஓமோன்கள் திடீரென குறைவதால், மன அழுத்தம், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. Pளலஉhழநெரசழநனெழஉசiழெடழபல (2022) ஆய்வின்படி, எஸ்ட்ரோஜன் குறைவு மூளையின் “யஅலபனயடய” (உணர்ச்சி பகுதி) செயல்பாட்டை அதிகரித்து, மனக்கவலை மற்றும் பதற்றத்தை உருவாக்குகிறது.
• ஊழசவளைழட: ஓமோன் மாற்றங்களால் மாதவிடாயின் போது மன அழுத்த ஓமோன் (உழசவளைழட) அதிகரிக்கும் - மன அமைதி குறைந்து, வேலை அல்லது கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போகும்.
பொதுவான மனநல பிரச்சினைகள் பல ஏற்படுகின்றன.
• மாதவிடாய் முன் நோய்க்குறி (Pஆளு)
ழ 80–90மூ பெண்கள் லேசான Pஆளு அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். 20–30மூ பேர் மிதமான அல்லது கடுமையான அறிகுறிகளை சந்திக்கின்றனர் (யுஅநசiஉயn ஊழடடநபந ழக ழுடிளவநவசiஉயைளெ யனெ புலநெஉழடழபளைவளஇ 2023). மன ஏற்ற இறக்கங்கள், எரிச்சல், கவலை, துக்கம், சமூகத் தனிமை, சோர்வு, கவனக்குறைவு (“மூளை மந்தம்”), தூக்கக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் இதற்கான அடையாளமாக காணப்படுகின்றன.
• Pஆனுனு (Pசநஅநளெவசரயட னுலளிhழசiஉ னுளைழசனநச)
ழ 3–8மூ பெண்களுக்கு Pஆனுனு உள்ளது. இது Pஆளு-இன் கடுமையான வடிவம் ஆகும், இது னுளுஆ-5 இல் மனநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடும் மனச்சோர்வு, கோபம், நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணங்கள். வேலை, உறவுகள் அல்லது தினசரி செயல்பாடுகளில் தடை போன்றன இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.
• கல்வி அல்லது வேலை அழுத்தம்:
ழ டீஆஊ றுழஅநn’ள ர்நயடவா (2019) ஆய்வின்படி, 40மூ மாணவர்கள் மாதவிடாய் அறிகுறிகளால் கல்வி திறன் குறைவதாக கூறினர்.
ழ கடுமையான அறிகுறிகள் உள்ளவர்களின் வேலைத் திறன் 33மூ குறைகிறது (டீசவைiளா ஆநனiஉயட துழரசயெடஇ 2020).
- சமூகத்தில் சில நேரங்களில் அவமானப்படுத்தப்படும் உணர்வு, தனிமை போன்றவற்றால் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
• கலாச்சார களங்கம்:
ழ பல பகுதிகளில் மாதவிடாய் பற்றி பேசுவதை தவிர்க்கும் பழக்கம், மனக்கவலை மற்றும் தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது. ருNஐஊநுகு (2021) அறிக்கையின்படி, இந்தியாவில் 71மூ பெண்கள் மாதவிடாய்க்கு தயாராக இல்லாததால் குழப்பம் அடைகின்றனர். - கடுமையான மனநல அபாயங்கள்
• Pஆனுனு மற்றும் தற்கொலை அபாயம்:
ழ Pஆனுனு உள்ளவர்களுக்கு தற்கொலை முயற்சி வாய்ப்பு 7 மடங்கு அதிகமாக உள்ளது. (ர்யசஎயசன சுநஎநைற ழக Pளலஉhயைவசலஇ 2022) மேலும் மனநோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு மாதவிடாய் கட்டத்தில் அறிகுறிகள் மோசமடைகின்றன. - சிகிச்சை மற்றும் மேலாண்மை
• வாழ்க்கை முறை மாற்றங்கள்:
ழ உடற்பயிற்சி, மன தளர்ச்சியை குறைக்கும் தியானம், மற்றும் ஓமேகா-3, மெக்னீசியம் நிறைந்த உணவு போன்றன முறையாக எடுக்கப்பட வேண்டும்.
ழ ளுளுசுஐ மாத்திரைகள் (எ.கா.,கடரழஒநவiநெ) மற்றும் ஓமோன் கட்டுப்பாடு மாத்திரைகள் பயன்படுத்தப்படல் (Pஆனுனு க்கு குனுயு அங்கீகாரம் பெற்றவை) போன்ற மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
• உளவியல் ஆதரவு:
ழ ஊடீவு (ஊழபnவைiஎந-டீநாயஎழைசயட வுhநசயில) மூலம் அறிகுறிகள் 50மூ குறைகின்றன. (ஊழஉhசயநெ னுயவயடியளநஇ 2023).
சமூக பார்வையில் நிலவும் தவறான எண்ணங்கள்:
இவ்வாறான பல்வேறு நன்மைகள், அதே சமயம் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுவதில்லை. மதிக்கப்படாவிடினும் பரவாயில்லை ஏதோ பெரும் குற்றம் செய்தவர்களை போல் நடாத்தப்படுகின்றனர்.
• மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்று பார்ப்பது.
• சில சமயங்களில் பெண்கள் சடங்குகளில் பங்கேற்க முடியாது என்று சொல்லப்படும்.
• வீட்டில் தனியாக வைத்தல், தேவையான உடல் பராமரிப்பு செய்யாமல் இருத்தல் போன்ற பழக்கங்கள் கூட இன்றும் காணப்படுகின்றன.
இன்றும் இந்நிலைமை இருப்பதனாலோ என்னவோ பெண் இனமே பாவப்பட்ட ஜாதியாக என் கண்களுக்கு தெரிகிறது. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என பல்வேறு கோஷங்கள் எழுப்பட்டாலும் இறுதியில் உரிமைகள் இழந்து அவமானப்படுத்தப்படுவதும் பெண்களே.
மேலே ஆரம்பத்தில் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டினை மேலும் விரிவுபடுத்தலாம்:
கமலும் நிவேதாவும் திருமணமாகி பத்து வருடங்கள் ஆனதும் குழந்தை இல்லை என்பதால், மாதவிடாய் தொடர்பான சிக்கல்களும், மன அழுத்தங்களும் அவர்களை தொடர்ந்து கெடுக்கியது. பக்கத்தவர்கள், “பிழை பெண்ணிடம் தான்” என்று விமர்சித்தனர். மாறாக, மக்களிடம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இருந்தால், பெண்கள் அவமானப்படுத்தப்படாமல், அவர்களின் உடலின் இயற்கையை புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும்;; மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்; நாம் ஒவ்வொருவரும் மாறாதவரை முழு சமுதாயமும் மாற்றம் காணாது. எனவே அதற்கான வழிமுறைகளை பின்வருமாறு பார்க்கலாம்.
- மாதவிடாய் தொடர்பான கல்வியின் தேவைகள்:
• பள்ளி நிலைதான் தொடக்கமாக இருக்க வேண்டும். மாதவிடாய் பற்றி சிறந்த கல்வி பெண், ஆண் இருவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
• பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அல்லது மருத்துவ நிபுணர்கள் மூலமாக மாதவிடாய் குறித்த விளக்க வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
• மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள், அவற்றை சரியாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து கல்வி வழங்கப்பட வேண்டும். - மாதவிடாய் குறித்த சட்டங்கள் மற்றும் அரசு நடவடிக்கைகள்:
• மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்
• வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கவனத்திற் கொண்டு உடல் நிலை மோசமாக உள்ள விடுமுறை தேவைப்படும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவதற்கான சட்ட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் - பொதுமக்கள் விழிப்புணர்வு:
• ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை வழியாக மாதவிடாய் குறித்த தவறான நம்பிக்கைகள் நீக்கப்பட வேண்டும்.
• மனநல ஆலோசகர்கள் மூலம் பெண்கள் மன அழுத்தங்களை குறைக்க தேவையான ஆலோசனைகள் எடுக்கப்பட வேண்டும்.
மாதவிடாயில் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள்:
மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு உடல் செயல்பாடாக இருந்தாலும், பல பெண்களுக்கு இது சமூக, பொருளாதார மற்றும் உளவியல் சவால்களையும் ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, வளரும் நாடுகளில் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள், பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர்:
- பொருளாதார நிலைமை:
மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் (ளுயnவையசல Pயனளஇ வுயஅpழளெஇ ஆநளெவசரயட ஊரிள) பலருக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல குடும்பங்கள் மாத விற்பனை வருமானத்திலேயே இயங்குவதால், மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்கள் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் இல்லாமல் போகிறது.
ருNஐஊநுகு 2022 அறிக்கையின்படி, தெற்காசியாவின் பின்தங்கிய பகுதிகளில் 1 இல் 3 பெண்கள் மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்கள் வாங்க இயலாமல் பாதிக்கப்படுகின்றனர். - சமூக மற்றும் கலாச்சார தடைகள்:
கிராமப் புறங்களில் சமூக கட்டுப்பாடுகள், பழமைவாதம் காரணமாக தவறான நம்பிக்கைகளில் சிக்கி வாழும் பெண்களை மாதவிடாயைச் சுற்றியுள்ள பல சமூக நம்பிக்கைகள், அவர்களை தனிமைப்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. “அழுக்கானது”, “தடைபட்டது” போன்ற எண்ணங்கள் பெண்களை குடும்பத்திலிருந்தும், கல்வியிலிருந்தும், சமயச் செயற்பாடுகளிலிருந்தும் விலக்குகின்றன.
இந்தியாவில் சில கிராமங்களில் பெண்கள் மாதவிடாயின்போது தனிக் குடிசைகளில் வைக்கப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதால் மனநிலை பாதிப்பு, தாழ்வு உணர்வு, நம்பிக்கையின்மை போன்ற உளவியல் விளைவுகள் ஏற்படுகின்றன. - குடும்பத்தினரால் கிடைக்க வேண்டிய ஆதரவைப் பெற முடியாமல் போன நிலை.
பல குடும்பங்களில் மாதவிடாய் குறித்த அறிவும், ஆதரவுமின்றி பெண்கள் வளர்கின்றனர். சிறுமிகளுக்கு முதன்முதலில் மாதவிடாய் வரும் போதே அவர்களுக்கு யாரும் உரிய விளக்கம் தருவதில்லை. பசிமிகுதியில் “மூச்சுவிட முடியாத அனுபவம்” என பலர் விவரிக்கின்றனர்.
Pடயn ஐவெநசயெவழையெட ஆய்வின்படி, 48மூ சிறுமிகள் மாதவிடாய் பற்றி அறியாமல் முதல் அனுபவத்தை எதிர்கொள்கின்றனர்.
பெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து ஆதரவு கிடைக்காமை, பெண்கள் மனத்தில் பதட்டம், பயம், மற்றும் நம்பிக்கையின்மையை உருவாக்குகின்றது.
முடிவுரை:
இன்றும் மாதவிடாய், பல பெண்களின் வாழ்க்கையில் ஒரு வெட்கத்தையும் வலியையும் தரும் சோதனையாகவே இருக்கிறது. இது இயற்கையின் பாகம் என்பதை உணராமல், அதை வெளிப்படையாக பேசுவதற்கே பயப்படும் சமுதாயத்தின் கட்டமைப்பில் நாம் வாழ்கிறோம். ஆனால், இந்த அமைதியை உடைத்து, மாற்றத்திற்கான முதல் அடி எடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மாதவிடாய் விழிப்புணர்வு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல சகோதரர்கள், தந்தைகள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒரு பக்கம். மாதவிடாய் குறித்த வறுமையான அறிவும், தவறான நம்பிக்கைகளும் பெண்களின் உடல் அமைப்பு, கல்வி, மனநலம், எதிர்காலம் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கின்றன.
ஒரு பெண் சுதந்திரமாக வாழ, அவளது உடலை அவளே புரிந்து கொண்டு, அதில் உரிமை செலுத்த வேண்டும். இந்த உரிமையை உருவாக்கி கொடுப்பது — நம் சமூகத்தின், அரசின், கல்வி அமைப்பின், மற்றும் ஊடகங்களின் பொறுப்பாகும். “மாதவிடாய் என்பது வெறும் இரத்தம் அல்ல, அது ஒரு உயிரை உருவாக்கும் தெய்வீக சக்தி” என்பதை உணர்ந்து, பெண்கள் எதிர்கொள்ளும் வலிகளை சிறுமைப்படுத்தாமல், அதற்காக உணர்வும் ஆதரவும் காட்ட வேண்டும்.
இந்த உலகில் மாதவிடாயைப் பற்றிப் பேச நினைக்கும் ஒவ்வொரு சிறுமிக்கும், அதைப் புரிந்து கொள்ளும் உறவுகளும், ஆசிரியர்களும், மருத்துவர்களும் தேவை. மாதவிடாயை ஓர் இயற்கை சக்தியாகச் சிந்திக்கும் குழந்தைகளே நாளைய பன்முகமான சமுதாயத்தை உருவாக்குவார்கள். அது குறைக்கும் அல்லது மறைக்கும் ஒன்றாக இல்லாமல், அவ்விதமான உயிரின் செயலாக அறிந்து கொள்ளும் நிலைக்கு நாம் உயர வேண்டும். பெண்கள் வெறுமனே தாங்கும் சக்தியாக இல்லாமல், புரிந்துணரப்படும் உயிராக பார்ப்பதில்தான் மனிதாபிமானத்தின் நிஜமான முகம் அடங்கியுள்ளது.
எனவே, மாதவிடாயைப் பற்றிய பேசல்களை மௌனத்தில் புதைத்து வைக்காமல், வெளியில் கொண்டு வந்து மாற்றத்திற்கு வித்திட்டால், ஒரு பெண் இனமும் ஒரு சமுதாயமும் சுதந்திரமாக மலரும்.
Penned by: Rtr. Abdul Faloos Fanoosa


