Journey through SLAMM

There are no precise words to describe our excitement as we waited for the event to begin, from the very moment of registering. In a situation where every day passes as the day before, waiting for a special day is another kind of joy, isn’t it?

The first task that awaited us by the end of the wait was to ready ourselves as superheroes. Undoubtedly, an essential task to complete before going on an adventure. The figure of a superhero that appears right away in everyone’s mind in this pandemic is precisely this: the masked face of a responsible citizen. So we masked ourselves for the journey and  took out our weapons, ranging from sanitizers to swords, clubs and scissors. The adventure that began with a group of five members came to an end with five friends in a group. We realized the amount of truth behind the statement, that working and playing together fosters friendship!

The first part of our adventure began in the Faculty of Science. This was a game of quiz to open our minds. The rule was that each of the members had to play the game within 10 minutes. It was thoroughly amusing. The purpose of the game, as we all realized, was to increase our engagement in the event. Every game led us to the next level, which actually induced us to get involved more into the game. We had to guess ten songs within ten minutes. Since we worked in unison, we were able to guess 9 songs. which was a wonderful achievement, from our perspective. One of the interesting facts regarding this particular game was that all the songs started with the letter ‘S’.

Thus, the completion of this task got us into the premises of the Faculty of Law. Being a law student, I was pretty enthusiastic about playing this particular phase of the game. When we entered, we heard the sounds of the zombies. We wanted to finish the task here and move on as soon as possible. The task required us to identify the voices of some of the prominent cartoon characters. This was quite nostalgic, as we all knew these admirable characters were one of those rare tickets to our childhood. And this is the part where we actually became friends. We could get almost all of the characters. The next challenge was a quiz about our prestigious university. There were 10 questions, with the allocation of two questions per faculty. The questions were interesting and we had fun answering them as we were five people from the five different faculties of the university.

Intoxicated with enjoyment, we went on to the next part that led us to the Faculty of Arts. What awaited us there was something really intriguing. Here, we had to solve riddles and crosswords. Considering the time, we divided the task between the members. Two members handled the job of solving the crosswords while the others dealt with the riddles. This task was quite demanding than the others, so that we had to spend some more time on it. We didn’t forget about the zombies as we tried to escape the situation.

We were somewhat weary when we entered the Faculty of Management. The game here seemed to be  designed specially to dismiss our tiresomeness. This was a unique type of a crossword puzzle. The eagerness to solve it increased as we played. Doing things and solving it actually gave us a boost and we were all perfectly happy. We also had to find the way out. So we divided ourselves into three groups and found 10 unique ways which guided us into the Faculty of Medicine.

We were overwhelmed by the fact that getting into the Faculty of Medicine meant that, we were to pass the final obstacle and finally finish the game, successfully escaping the apocalypse. We were given the task of identifying the organs of the human body, by watching videos. This was an unexpected task that befell on us, but engaging anyways. The next task we were assigned to do was to find a special word. The keys to the puzzle revealed the special word to be ‘WISDOM’. Along with the literal meaning of the word, it had an added value: This one word completed the motto of our university, which is “Wisdom Enlightens!” It marked the end of the games. As long as the journey is breathtaking, it is only foolish to fret over the destination. So, the results of the games were not all that important to us compared to this journey, amidst the pandemic, the lockdowns and the online lectures. It’s a rare opportunity to have some fun and relaxation in these tiring times, isn’t it?

SLAMM ஊடான  பயணம்

அதிகாலை எழுந்து பரபரப்பாக கல்லூரியை நோக்கி செல்வது, சன நெரிசலால் பொங்கி வழியும் பேருந்தில் தொற்றிக் கொள்வது, கொஞ்சம் சிரத்தையுடன் விரிவுரைகள், நண்பர்களுடன் அரட்டை… இது எதையுமே அனுபவிக்க முடியாத ஒரு காலம். கல்லூரி மாணவர்களாகிய எமக்கு சங்கடத்தை உருவாக்கக் கூடிய ஒரு காலம். ஆயினும் இளமைத் துடிப்புடைய நமக்கு விதியிடம் முழுமையாச் சரணடைவது பழக்கமில்லாத ஒன்று. எதையும் வளைத்துப் பார்ப்பது போல இந்த காலத்திற்கே உரித்தானதான தனிமையையும், சலிப்பையும் வளைத்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியே கொழும்பு பல்கலைக்கழக ரொட்டரக்ற் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட SLAMM தேடுதல் போட்டி. கடந்த 29ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4.30 மணி வரை எம்முள் இருந்த சிறிய சாகசப் பிரியனை மகிழ்விக்க இந்நிகழ்ச்சி எமக்கு கைகொடுத்தது.

நிகழ்ச்சிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்த நாள் தொடக்கம் நிகழ்ச்சியின் வேளை வரை இருந்த ஆர்வ மேலீட்டிற்கு அளவில்லாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக கழிந்து செல்லும் இவ்வேளையில் வித்தியாசமான ஒரு நாளுக்காக காத்திருப்பதும் ஒரு சுகம் அல்லவா!

காத்திருப்பின் முடிவில் வந்த முதல் பணி சாகச வீரனாக எம்மை அலங்கரித்துக் கொள்வது. சாகசப் பயணத்தின் தொடக்கத்தில் செய்யப்பட வேண்டிய அத்தியாவசியமான காரியம் தான். இந்தப் பேரிடர் காலத்தில் அனைவரின் மனதிலும் இருக்கக்கூடிய சாகச வீரனின் தோற்றம் ஒன்று தான்: முகக்கவசமணிந்த ஒரு பொறுப்புள்ள பிரஜையின் முகம். ஆறு பேர் கொண்ட ஒரு குழுவின் அங்கத்தவர் என்ற பாணியில் தொடங்கி, ஒரு குழுவின் ஆறு நண்பர்கள் என்றவாறு முடிந்த ஒரு அற்புதமான பயணம். ஒன்றுசேர்ந்து விளையாடுவதும், பணிசெய்வதும் நட்பை வளர்க்கும் என்பது எவ்வளவு பெரிய உண்மை!

அந்த வகையில், எங்கள் முதல் சாகசம் அறிவியல் பீடத்தில் தொடங்கியது. இது எம் மனதை திறக்கும் ஒரு புதிர் விளையாட்டு. இந்த விளையாட்டை ஐந்து உறுப்பினர்களும் 10 நிமிடங்களுக்குள் விளையாட வேண்டும் என்பதே விதி. குறைந்த நேரத்தில் அதை முடிக்கும் அணி புள்ளிகளை பெறும். இது மிகவும் சுவாரஸ்யமான ஒரு விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டின் முக்கிய நோக்கம் எங்கள் ஈடுபாட்டை அதிகரிப்பதாகும். அடுத்த ஆட்டம் விளையாட்டின் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச்செல்லும். எனவே அதிக அக்கறையுடன் விளையாடினோம். 10 நிமிடங்களுக்குள் 10 பாடல்களை யூகிக்க வேண்டும். குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதில் 10 பாடல்களில் 9 பாடல்களைக் கண்டறிந்தோம். பாடல் தேர்வு அருமையாக இருந்தது. மேலும் பாடல்களின் சிறப்பு என்னவென்றால், பாடலின் அனைத்து பெயர்களும் S என்ற எழுத்தில் ஆரம்பித்தமை ஆகும். அந்த விளையாட்டோடு நாங்கள் சட்ட பீடத்திற்குள் நுழைந்தோம்.

அறிவியல் பீடத்திலிருந்து தப்பிக்க முடிந்த பிறகு நாங்கள் சட்ட பீடத்திற்குள் நுழைந்தோம். ஒரு சட்டபீட மாணவியாக சட்ட பீடத்திற்குள் விளையாடுவதில் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நாங்கள் சட்ட பீடத்தில் நுழைந்த போது அருகில் zombies இன் சத்தம் கேட்டது. இதன் விளைவாக, இந்த நிலையை முடித்து அடுத்த கட்டத்திற்கு தப்பிப்பதில் எங்களுக்கு அதிக அக்கறை ஏற்பட்டது. Cartoon கதாபாத்திரங்களின் பெயரைக் கண்டுபிடிப்பதே சட்ட பீடத்தில் முதல் விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஏனெனில் இது எங்கள் குழந்தை பருவ நினைவுகளை நினைவூட்டியது. இந்த விளையாட்டின் மூலம் எங்கள் குழு உறுப்பினர்கள் அந்நியர்களிலிருந்து  நண்பர்களாக மாறினோம். நாங்கள் கிட்டத்தட்ட எல்லா கதாபாதிரங்களையும் கண்டுபிடித்தோம். அடுத்த விளையாட்டிற்குள் இறங்கினோம், இது எமது பல்கழைகழகம் தொடர்பான வினாடி வினா விளையாட்டு. வினாடி வினாக்குள் 10 கேள்விகள் இருந்தன, ஒவ்வொரு பீடத்தை பற்றி 2 கேள்விகள் இருந்தன. சட்ட பீடம் பற்றிய கேள்வி மிகவும் வேடிக்கையானதும் சுவாரஸ்யமானதுமாக இருந்தது. எங்கள் குழுவில் 5 பீடத்திலிருந்தும் உறுப்பினர்கள் இருந்தனர். எனவே நாங்கள் ஒரு குழுவாக பணியாற்றி அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தோம்.

இப்போது அதிக உற்சாகத்துடன் நாங்கள் கலை பீடத்தில் நுழைந்தோம். கலை பீடத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. அடிப்படையில் அந்த விளையாட்டில் புதிர் குறுக்கெழுத்துக்கள் மற்றும் வினாடி விடை போன்றவை இருந்தன. இந்த விளையாட்டுக்காக நாங்கள் எங்கள் விளையாட்டை அணியினருக்குள் பிரித்தோம். இருவர் புதிர் செய்தனர், மற்றவர் குறுக்கெழுத்து செய்தார், மற்ற இருவரும் வினாடி வினா செய்தனர். மற்ற பீடங்களில் நாங்கள் செலவிட்ட நேரத்தை ஒப்பிடும்போது இது சிறிது நேரம் எடுத்தது. இன்னும் நாங்கள் zombies பற்றி பயத்துடனும் கவலையுடனும் இருந்தோம். எனவே நாங்கள் விரைவாக பணியை முடித்து கலை பீடத்திலிருந்து தப்பித்தோம்.

அந்த சவால்களை முடித்த பிறகு நாங்கள் சோர்வடைந்தோம். அந்த சோர்வுடன் நாங்கள் நிர்வாக பீடத்தில் நுழைந்தோம். நாங்கள் சோர்வாக இருந்ததால் அடுத்த விளையாட்டு எங்கள் ஆற்றலை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.  இது ஒரு சுவாரஸ்யமான குறுக்கெழுத்து புதிர், எங்கள் குழு உறுப்பினர்கள் பதில்களைக் கண்டுபிடிக்க ஒன்றாக வேலை செய்தனர். விரைவில் விளையாட்டு மேலும் மேலும் சுவாரஸ்யமானது, மேலும் அந்த மகிழ்ச்சியுடன் பதில்களைக் கண்டுபிடித்தோம், எங்களை சவால் செய்ய எங்கள் அடுத்த சவாலை எடுத்தோம். அடுத்த சவால் மிகவும் சுவாரஸ்யமானது, அங்கு நாங்கள் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும், எனவே நாங்கள் மூன்று குழுக்களாகக் பிரிந்து, பத்து இடங்களின் வழிகளைக் கண்டுபிடித்தோம், அது எம்மை மருத்துவ பீடத்திற்கு அழைத்துச் சென்றது.

நாங்கள் மருத்துவ பீடத்திற்கு வந்தவுடனேயே எங்களுக்குள் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது, ஏனெனில் zombies களிடமிருந்து தப்பித்து விளையாட்டை வெற்றிகரமாக முடிக்க இது கடைசி தடையாகும். வீடியோக்களைப் பார்த்து உறுப்புகளைக் கண்டுபிடிப்பதே எங்களுக்கு முதல் விளையாட்டு. அந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, நாங்கள் அதை நன்றாக விளையாடினோம். அடுத்து அன்றைய வார்த்தையைக் கண்டுபிடித்தோம், அது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வார்த்தையின் இரண்டு எழுத்துக்களை நாங்கள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தோம், வார்த்தையைக் கண்டுபிடிக்க எங்கள் குறிப்பைப் பெற்றோம். கடைசியில் நாம் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தோம், அந்த வார்த்தை WISDOM என்பதாகும். அதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த வார்த்தை எங்கள் பல்கலைக்கழக குறிக்கோளை நிறைவு செய்கிறது WISDOM அறிவொளி !!! என்பதே அதுவாகும். நாங்கள் வெற்றிகரமாக வெளியேறினோம். இந்த pandemic, lockdown மற்றும் online lectures ற்க்கு மத்தியில் இந்த SLAMM எனும் ஏற்பாடு மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இது எங்கள் மனதை நிதானப்படுத்தவும், சிறிது நேரம் வேடிக்கையாகவும் இருக்க உதவியது. மேலும் எங்களுக்கு புதிய நண்பர்களும் கிடைத்தார்கள்! இது போன்ற கால கட்டத்தில் இதுபோன்று வேடிக்கை கிடைப்பது அரிதல்லவா?

  • Written in Tamil by Rtr. Befflin Ayub & Rtr. M. C. Kanula 
  • Translated to English by Rtr. M. C. Kanula

Visit the SLAMMUOC Instagram page to view the prototype videos :

One Reply to “Journey through SLAMM”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: