What is a Pandemic?

Definition of a pandemic

A pandemic is defined as “an epidemic occurring worldwide, or over a very wide area, crossing international boundaries and usually affecting a large number of people”. The classical definition includes nothing about population immunity, virology or disease severity. By this definition, pandemics can be said to occur annually anywhere in the globe, given that seasonal epidemics incur cross international boundaries and affect a large number of people. However, seasonal epidemics are not considered pandemics.

Notable pandemics in history

Throughout human history, there have been a number of pandemics of diseases such as smallpox and tuberculosis (TB). The most fatal pandemic in recorded history was the Black Death (also known as The Plague), which killed an estimated 75–200 million people in the 14th century and a later pandemic, the 1918 influenza pandemic (Spanish flu). Current pandemics include COVID-19 (SARS-CoV-2) and HIV/AIDS. The World Health Organization (WHO) declared COVID-19 to be a pandemic as such on March 12, 2020. when it became clear that the illness was severe and that it was spreading quickly over a wide area.

Modern flu pandemics

Most virus pandemics have been caused by influenza (flu) viruses. Flu viruses can change from season to season and while health professionals are pretty good at predicting how the virus will change, occasionally a new virus pops up that doesn’t behave as predicted. That’s when a pandemic is most likely to occur because most people don’t have immunity to the new virus.

Improving global preparedness for pandemic outbreaks

The international community has made progress toward preparing for and mitigating the impacts of pandemics. Delayed reporting of early SARS cases in 2003 also led the World Health Assembly to update the International Health Regulations (IHR) to compel all World Health Organization member states to meet specific standards for detecting, reporting on, and responding to outbreaks. International donors also have begun to invest in improving preparedness through refined standards and funding for building health capacity.

Challenges of implementing pandemic regulations

Despite these improvements, significant gaps and challenges exist in global pandemic preparedness. Progress toward meeting the IHR has been uneven, and many countries have been unable to meet basic requirements for compliance. Multiple outbreaks, notably the 2014 West Africa Ebola epidemic and 2020 Covid-19 pandemic, have exposed gaps related to the timely detection of disease, availability of basic care, tracing of contacts, quarantine and isolation procedures, and preparedness outside the health sector, including global coordination and response mobilization. These gaps are especially evident in resource-limited settings and have posed challenges during relatively localized epidemics, with dire implications for what may happen during a full-fledged global pandemic.

ගෝලීය වසංගතයක් යනු කුමක්ද?

ගෝලීය වසංගතය සඳහා නිර්වචනයක්

ගෝලීය වසංගතයක් සඳහා වන සාමාන්‍ය නිර්වචනය වන්නේ ජාත්‍යන්තර සීමා ඉක්මවා යමින් සමස්ත ලෝකය පුරාම පැතිර යන සහ සාමාන්‍යයෙන් විශාල පිරිසකට බලපෑම් ඇති කරන වසංගතයක් යන්නයි.  මෙම  නිර්වචනය තුලින්  ජනතාව තුල වන ප්‍රතිශක්තිය, වෛරස්  විද්‍යාව, හෝ රෝගයේ ඇති බරපතල බව ආදී වූ සාධක පිළිබඳ කිසිවක් අන්තර්ගත නොවේ.  විවිධ කාලවලදී හට ගන්නා වසංගත ලොව පුර පැතිර යන බැවින්ද විශාල පිරිසකට ආසාදනය වන බැවින්ද ඉහත නිර්වචනය අනුව ගෝලීය වසංගත  සෑම වර්ෂයකම පාහේ ලෝකයේ ඕනෑම ස්ථානයක සිදුවිය යුතුයි. කෙසේවෙතත් එවැනි සාමාන්‍ය වසංගත ගෝලීය වසංගත ලෙස නොසැලකේ.

ඉතිහාසයෙන් වාර්තා වන වසංගත

මානව ඉතිහාසයේ එක් එක් අවධි තුල  විවිධ වසංගත බොහෝ ප්‍රමාණයක් වාර්තා වී ඇත. ක්ෂය රෝගය සහ වසුරිය මීට කදිම නිදසුන් වේ. ඉතිහාසයෙන් වාර්තා වූ දරුණුතම වසංගතය ලෙස 14 වන සියවසේදී  මිනිස් ජීවිත මිලියන 75-100 අතර  ප්‍රමාණයක් බිලිගත් කළු මරණ වසංගතය (black death) සහ  1918 දී ඇතිවූ ඉන්ෆ්ලුවන්සා වෛරස් තත්ත්වය දැක්විය හැක. වර්තමානයේදී  ගෝලිය වසංගත ලෙස කොවිඩ්-19 වෛරසය  සහ HIV/AIDS දැක්විය හැක. 2020 මාර්තු 12 වන දින  ලෝක  සෞඛ්‍ය සංවිධානය විසින් කොවිඩ්-19 ගෝලීය වසංගතයක් ලෙස නම් කරන ලදී. ඒ රෝග තත්තවයේ  ඇති බරපතලකම සහ එහි ශීඝ්‍ර ව්‍යාප්තිය ගම්‍ය වීමෙන් අනතුරුව ය.

 වර්තමානයේ  වසංගතවල හැසිරීම

වෛරස තුළින් උද්ගත වූ වසංගත බොහොමයක රෝග කාරකය වී ඇත්තේ ඉන්ෆ්ලුවන්සා වෛරසයයි. එම වෛරසය කලින් කලට වෙනස් විය හැකි අතර සෞඛ්‍ විශේෂඥයින්  එය වෙනස්වන ආකාරය  මනාව පුරෝකථනය කිරීමට  සමත් වී ඇත. එහෙත් කලාතුරකින් නව වෛරසයක බලපෑම කරණ කොටගෙන පුරෝකථනයන් ඒ අයුරිය්න්ම සිදු නොවිය හැක. ගෝලීය වසංගතයක් ඇතිවිය හැක්කේ එවැනි අවස්ථාවක ය. මන්දයත් නව වෛරසයට එරෙහිව පුද්ගලයන් තුල ප්‍රතිශක්තිය ගොඩනැගී නොමැති බැවිනි.

වසංගත රෝගය  සඳහා ගෝලීය සූදානම ඉහල නැංවීම

ගෝලීය වසංගත සඳහා සුදානම් වීමේදී සහ එහි බලපෑම අවම කිරීමේ කර්තව්‍යයේදී ජාත්‍යන්තර ප්‍රජාව ඉහල ප්‍රගතියක් අත්කරගෙන ඇත. වසංගත හඳුනාගැනීමට, වාර්තා කිරීමට සහ ඊට ප්‍රතිචාර දැක්වීම සඳහා වන ප්‍රමිතීන්ට අනුගත වන පරිදි අන්තර්ජාතික සෞඛ්‍ය රෙගුලාසි (IHR) යාවත්කාලීන කිරීම කෙරෙහි ලෝක සෞඛ්‍ය සමුළුව උත්සුක කරවීමට හේතු වුයේ 2003 දී SARS රෝගීන් ගණන වාර්තා කිරීමට  ප්‍රමාද වීම විය හැක. ජාත්‍යන්තර පරිත්‍යාගශීලීන්  පවා  පෙර සූදානම ඉහල නැංවීම උදෙසා ක්‍රියාකරන අතරම රටවල සෞඛ්‍ය ක්ෂේත්‍රයේ ධාරිතාව ඉහල නැංවීම සඳහා අරමුදල් රැස්කිරීම ද සිදුවෙමින් පවතී.

වසංගතය තුරන් කිරීමට අදාල රෙගුලාසි ක්රියාවට නැංවීමෙහි ලා ඇති අභියෝග

වසංගත තත්ත්වයන්ට මුහුණදීමට ඇති පෙර සූදනමෙහි ප්‍රගතියක්  පිළිඹිබු වුවද  දුර්වලතා සහ අභියෝග රාශියකට මුහුණ දීමට සිදුවේ. අන්තර්ජාතික සෞඛ්‍ය රෙගුලාසි සපුරලීමෙහි ප්‍රගතිය රටවල් අතර අසමාන වන අතර බොහෝ රටවල් මුලික විදිවිධාන පවා අනුගමනය කිරීමට අපොහොසත් වී ඇත.  2014  බටහිර අප්‍රිකානු ඉබෝලා වසංගතයේ සහ 2020 කොවිඩ්-19 යන අවස්ථාවලදී විවිධ දුර්වලතා රැසකට මුහුණ දීමට සිදු වී ඇත. මුල් අවස්ථාවේදී රෝගය  හඳුනාගැනීමට අපොහොසත් වීම, මුලික පහසුකම් නොමැති වීම, අශ්රිතයින් හනිනගනීමේ දුර්වලතා, නිරෝධායන ක්‍රියාවලියේ ගැටළු, සෞඛ්‍ය ක්ෂේත්‍රයට පරිබාහිරව ඇති ගැටළු ආදිය ඊට උදාහරණ වේ. සීමිත සම්පත් සහිත ප්‍රදේශවල මෙවැනි ගැටළු බහුල වශයෙන් දැකිය හැකි අතර පූර්ණ වශයෙන් ගෝලීය වසංගතයක් තුළ සිදුවිය හැකි ව්‍යසනය පිළිබඳව  බරපතල ඇඟවුම් සහිතව, සාපේක්ෂව   දේශීය වශයෙන්  බල පැවැත්වුණු  වසංගත කාලවලදී අභියෝග මතු කර තිබේ.

தொற்றுநோய் என்றால் என்ன?

தொற்று நோய் என்பதற்கான வரைவிலக்கணம் :
“உலகளவில் அல்லது ஒரு பரந்த பரப்பில் அல்லது சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் சென்று பெரும் தொகையான மக்களை பாதிக்கும் ஒரு நோயே தொற்று நோய்” என்று வரையறுக்கப்படுகின்றது. கிளாசிக்கல் வரையறையில் தொற்று நோய் தொடர்பான வரைவிலக்கணத்தில் மக்கள் தொகை ,நோய் எதிர்ப்பு சக்தி, நோய் தீவிரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வரையறையின்படி, ஆண்டுதோறும் உலகில் எங்கும் தொற்றுநோய்கள் ஏற்படுவதாகக் கூறலாம், பருவகால தொற்றுநோய்கள், இவை சர்வதேச எல்லைகளைத் தாண்டியும் சென்று ஏராளமான மக்களைப் பாதிக்கின்றது. இருப்பினும், பருவகால தொற்றுநோய்கள் தொற்றுநோயாக கருதப்படுவதில்லை.

வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொற்றுநோய்கள்
மனித வரலாற்றைப் எடுத்துப் பார்த்தோமானால் பெரியம்மை , காசநோய் (காசநோய்) போன்ற பல தொற்றுநோய்கள் கால காலமாக இருந்துக் கொண்டிருப்பதை அறியலாம். வரலாற்றில் மிகவும் ஆபத்தான தொற்றுநோயாக Black Death ( பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது)பதிவு செய்யப்பட்டுள்ளது.இது 14 ஆம் நூற்றாண்டில் 75-200 மில்லியன் மக்களைக் கொன்றது, பின்னர் வந்த நோயான 1918 இன்ப்ளூவன்ஸா என்பதும் ஒரு தொற்றுநோயாகும். (ஸ்பானிஷ் காய்ச்சல்). தற்போது பரவலாக காணப்படும் COVID-19 (SARS-CoV-2) மற்றும் HIV / AIDS ஆகியவையும் தொற்று நோய்க்குள்ளேயே அடங்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 மார்ச் 12 அன்று COVID-19 ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்தது. இந் நோய் கடுமையானது மற்றும் அது ஒரு பரந்த பகுதியில் விரைவாக பரவுகிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இன்றைய உலகில் தொற்றுநோயின் நிலைமை

இன்ஃப்ளூவென்ஸா எனும் வைரஸ் பல வைரஸ் தொற்றுநோய்களுக்கு காரணியாக அமைகின்றது. வைரஸ் என்பது இடத்துக்கு இடம் அவ்வப்போது மாறக்கூடும், மேலும் அது எவ்வாறு மாறும் என்பதை சுகாதார வல்லுநர்களால் துல்லியமாக கணிக்க முடிந்தது. இருப்பினும், புதிதாக உருவாகும் ஒரு வைரஸின் செயற்பாட்டினை மதிப்பீடு செய்வது மிக அரிது. மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததே தொற்று நோய்கள் மனிதர்களை இலகுவாக ஆட்கொள்ளவும் பரவவும் காரணமாக உள்ளது.

தொற்றுநோய் பரவலை தடுக்க உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்

தொற்று நோய் பரவுதலை தடுப்பதிலும் அதன் தாக்கத்தைக் குறைப்பதிலும் சர்வதேச சமூகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் ஆரம்பகால SARS நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடுவதில் ஏற்படுத்தப்பட்ட கால தாமதமானது உலக சுகாதார சட்டமன்றத்தை சர்வதேச சுகாதார விதிமுறைகளை (IHR) புதுப்பிக்க வழிவகுத்தது. அனைத்து உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளையும் நோய்களை கண்டறிதல், அறிக்கையிடல் மற்றும் எதிராக போராடல் போன்ற விடயங்களில் அவற்றின் தரங்களை மேம்படுத்த கட்டாயப்படுத்தியது. சர்வதேச ரீதியாக பல நன்கொடையாளர்களும் சுகாதார பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சுகாதாரத் திறனை வளர்ப்பதற்கு நிதி முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

தொற்றுநோயை ஒழிப்பதற்கு பொருத்தமான விதிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள்

தொற்று நோய்கள் பரவுதலை தடுப்பதற்கான வழிமுறைகளில் முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் பல பலவீனங்களும் சவால்களும் உள்ளன. சர்வதேச சுகாதார விதிமுறைகளை நிறைவேற்றுவதில் எல்லா நாடுகளும் சமமான கரிசனை காட்டாமை மற்றும் பல நாடுகள் அடிப்படை ஏற்பாடுகளுக்கு கூட இணங்கத் தவறிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது. 2014 மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோய் மற்றும் 2020 கோவிட் -19 தொற்றுநோய் பல்லாயிரக்கணக்கான மக்களையும் பாதித்தது. இதற்கான காரணங்களாக ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறியத் தவறியது, அடிப்படை வசதிகள் இல்லாதது, இலகுவாக நோயாளர்களை அடையாளம் காண்பதில் உள்ள குறைபாடுகள், தனிமைப்படுத்தப்பட்ட செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு வெளியே உள்ள சிக்கல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய சிக்கல்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட பகுதிகளில் அதிகமாகவே காணப்படும்.
எனவே தான் இத்தகைய கொடிய தொற்று நோய்களின் தீவிர தாக்கங்களிலிருந்து முடியுமான வரை எம்மைக் காத்துக் கொள்வோம்.

Written in English by Nishadhi Thilakaratne

Translated into Sinhala by Udeep thennakoon

Translated into Tamil by Fathima Zahra

3 Replies to “What is a Pandemic?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: