Covid-19, initially a health crisis has easily and increasingly become a looming socio-economic crisis across the globe. In such context, Sri Lanka too has been facing immense difficulties, especially in today’s unprecedented circumstances where the public has been forced to step out in the streets demanding basic needs.
The Sri Lankan government, under the Quarantine and Prevention of Diseases Ordinance and other regulatory frameworks did indeed seek very appropriate and successful measures to contain the spread of the virus during the first phase, such as stringent lock downs and travel restrictions, increased tests, increased provision for health care, countering misinformation etc. However, with the pandemic’s prolonged prevalence, the policy measures by the government were unable to be continued due to the lack of financial provisions and economic stability in the country, resulting from the fallen tourism industry and the economic stand-still due to the extended lock downs imposed across the country through the special power of the president under the Public Security Ordinance no 25 of 1957.
Such lockdowns, largely militarized (the legality of which has been questioned by different parties) primarily affected the livelihoods of middle and low-income families, and the allowance of LKR 5000 distributed to support these vulnerable parties failed to provide a lasting solution to a group increasingly losing jobs and experiencing wage cuts. Similarly, while the government did introduce stimulus packages for small and medium scale enterprises, it has been reported that they prove to be “inadequate compared to an average of 3.5% of GDP allocated for the provision of stimulus packages in other countries.”
The decentralized approach of Sri Lanka’s response too is a significant aspect of the government’s policy. The District Secretaries and Divisional Secretaries, together with Grama Niladhari officers under the supervision of the Presidential task force for national deployment and vaccination plan, played a pivotal role in maintaining order during the lockdowns and the vaccination processes. However, the approach also led to “a lack of updated information on village population at the local level” and “inconsistency in circulars issued at the national level with regard to the provision of relief services” and other processes.
Accordingly, even though the measures initially taken by the government were commended as proactive, stringent and decentralized , limitations in physical, human and information resources, lack of consistency in government’s decision making, short term orientation prioritizing emergency relief and concerns raised regarding militarization and human rights violations hint at the lack of preparedness for pandemics and the absence of a national framework to guide such preparedness in Sri Lanka.
Covid-19 සමඟ ශ්රී ලංකාවේ නීතිමය ප්රතිපත්තිමය සටන: උදාහරණ සහ උගත් පාඩම්
ආරම්භයේදී සෞඛ්ය අර්බුදයක් වූ covid-19, වර්තමානයේ පහසුවෙන් සහ වැඩි වැඩියෙන් ලොව පුරා පැතිර යන සමාජ-ආර්ථික අර්බුදයක් බවට පත්ව ඇත. එවැනි සන්දර්භයක් තුළ, ශ්රී ලංකාව ද අතිමහත් දුෂ්කරතාවන්ට මුහුණ දෙන අතරම විශේෂයෙන්ම අද වන විට පෙර නොවූ විරූ තත්ත්වයන් තුළ සිය මූලික අවශ්යතා පවා ඉල්ලා පාරට බැසීමට මහජනතාවට සිදු වී ඇත.
ශ්රී ලංකා රජය විසින් නිරෝධායන සහ රෝග නිවාරණ ආඥාපනත යටතේ සහ අනෙකුත් නියාමන රාමු යටතේ, දැඩි වාරණයන් පනවමින් සහ ගමන් බිමන් සීමා කිරීම්, පරීක්ෂා කිරීම් වැඩි කිරීම් වැනි ක්රියාමාර්ග හරහා පළමු අදියරේදී වෛරසය පැතිරීම පාලනය කිරීම සඳහා ඉතා උචිත සහ සාර්ථක ක්රියාමාර්ග සොයාගන්නා ලදී. කෙසේ වෙතත්, වසංගතයේ දිගුකාලීන ව්යාප්තියත් සමඟ, 1957 අංක 25 දරණ මහජන ආරක්ෂක ආඥාපනත යටතේ ජනාධිපතිවරයාගේ විශේෂ බලය හරහා දිගු කරන ලද රට වසා තැබීම් හේතුවෙන් සංචාරක ව්යාපාරය කඩා වැටීම සහ ඇති වූ ආර්ථික බිඳ වැටීමේ ප්රතිඵලයක් ලෙස, උද්ගත වූ ආර්ථික අස්ථාවරත්වය හේතුවෙන් රජයේ ප්රතිපත්තිමය ක්රියාමාර්ග අඛණ්ඩව කරගෙන යාමට නොහැකි විය.
බොහෝ දුරට මිලිටරිකරණය ලක්ව ඇති (එහි නීත්යානුකූලභාවය විවිධ පාර්ශව විසින් ප්රශ්න කර ඇත) වාරණය කිරීම් හරහා මූලික වශයෙන් මධ්යම සහ අඩු ආදායම්ලාභී පවුල්වල ජීවනෝපායට බලපෑ අතර, මෙම අවදානමට ලක්විය හැකි, වැඩි වැඩියෙන් රැකියා අහිමි වූ සහ වැටුප් කප්පාදුව අත්විඳිමින් සිටින පාර්ශවයන්ට සහයෝගය දැක්වීම සඳහා බෙදා හරින ලද රුපියල් 5000 දීමනාව එකී කණ්ඩායමට කල්පවත්නා විසඳුමක් ලබා දීමට අපොහොසත් විය.ඒ හා සමානව, ශ්රී ලංකා රජය විසින් කුඩා හා මධ්ය පරිමාණ ව්යවසායන් සඳහා උත්තේජක පැකේජ හඳුන්වා දුන් නමුත්, එය අනෙක් රටවල් සමඟ සංසන්දනය කිරීමේදී,” ශ්රී ලංකාවේ දළ දේශීය නිෂ්පාදිතයෙන් 3.5% ක් මෙම උත්තේජක පැකේජ සඳහා වෙන් කොට තිබුණද අනෙක් රටවලට සාපේක්ෂව එය ප්රමාණවත් නොවන බව” වාර්තා වී ඇත.
ශ්රී ලංකාවේ ප්රතිචාරයේ විමධ්යගත ප්රවේශය ද රජයේ ප්රතිපත්තියේ වැදගත් අංගයකි. ජාතික යෙදවීම් සහ එන්නත් සැලැස්ම සඳහා වන ජනාධිපති කාර්ය සාධක බලකායේ අධීක්ෂණය යටතේ දිස්ත්රික් ලේකම්වරුන් සහ ප්රාදේශීය ලේකම්වරුන් ග්රාම නිලධාරීන් නිලධාරීන් සමඟ එක්ව වාරණ දැමීම් සහ එන්නත් ක්රියාවලීන් තුළ පිළිවෙලක් පවත්වා ගැනීම සඳහා ප්රධාන කාර්යභාරයක් ඉටු කළහ. කෙසේ වෙතත්, මෙම ප්රවේශය “ප්රාදේශීය මට්ටමින් ගමේ ජනගහනය පිළිබඳ යාවත්කාලීන තොරතුරු නොමැතිකම” සහ “සහන සේවා සැපයීම සම්බන්ධයෙන් ජාතික මට්ටමින් නිකුත් කරන ලද චක්රලේඛවල නොගැලපීම” සහ අනෙකුත් ක්රියාවලීන් සඳහා ද හේතු විය.
මේ අනුව රජය විසින් ගන්නා ලද ක්රියාමාර්ග මුලදී ක්රියාශීලී දැඩි හා විමධ්යගත වූවත් පසුව මානව සම්පත් භෞතික සම්පත් සහ තාක්ෂණික ක්රමවේද සීමාසහිත කිරීමත් සමගම රජය විසින් තීන්දු තීරණ ගැනීමේදී, ඒකාකාරී බවෙන් තොර වූ ක්රමවේද නිසාත් කෙටිකාලීන සහන ලබාදීම සඳහා ස්ථාපිත වූ ක්රමවේද නිසාත් ශ්රී ලංකාව සූදානම් නොවූ පසුබිමක් ගම්ය වේ. තවද මිලිටරිකරණය හේතුවෙන් ඇති ඇතිවූ මානව හිමිකම් උල්ලංඝනය වීමත් සමඟ ජාතික ප්රතිපත්තියක් නොමැති ක්රමවේද ද මේ සඳහා බලපෑමක් ඇති කළේ ය.
கோவிட்-19 உடனான இலங்கையின் சட்ட ரீதியான கொள்கைப் போர்: முன்னுதாரணங்களும் கற்ற பாடங்களும
ஆரம்பத்தில் சுகாதார நெருக்கடியாக இருந்த கோவிட் 19 தற்பொழுது பெரும் சமூக-பொருளாதார நெருக்கடியாக உலகம் முழுவதும் பெருக்கமடைந்துள்ளது. அவ்வாறிருக்க இலங்கையும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் முன்னொறுபோதும் இல்லாத வகையில் அடிப்படை மனித தேவைகளை கோரி பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் கோவிட் 19 இன் முதலாம் கட்டத்தில் , தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டம் மற்றும் பிற ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் கீழ், கடுமையான ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள், அதிகரித்த சோதனைகள், சுகாதார பராமரிப்புக்கான அதிகரித்த வள ஒதுக்கீடுகள் , தவறான தகவல் பரிமாற்றங்களை எதிர்த்தல் போன்ற செயற்பாடுகளூடாக வைரஸ் பரவுவதை மிகவும் பொருத்தமான மற்றும் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்த இயலுமாயிருந்தது. இருப்பினும், தொற்றுநோய்களின் நீண்டகாலப் பரவல், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையின் பற்றாக்குறை காரணமாக அரசாங்கத்தின் கொள்கை நடவடிக்கைகளைத் தொடர முடியவில்லை. 1957 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட பூட்டுதல் காரணமாக சுற்றுலாத் துறை வீழ்ச்சியுடன் பொருளாதார நிலை ஸ்தம்பித்தது.
பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட இத்தகைய பூட்டுதல்கள், (இதன் சட்டபூர்வமான தன்மை பல்வேறு தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது) முதன்மையாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது. மேலும் இந்த பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை ஆதரிப்பதற்காக வழங்கப்பட்ட ரூ.5000 கொடுப்பனவு வேலைகளை இழந்த வறிய குடும்பங்களுக்கு நீடித்த தீர்வை வழங்கத் தவறியது. இதேபோல், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கப் பொதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், “மற்ற நாடுகளில் ஊக்கப் பொதிகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 3.5% உடன் ஒப்பிடும்போது அவை போதுமானதாக இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையும் அரசாங்கத்தின் கொள்கைகளுள் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். தேசிய வரிசைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் மேற்பார்வையின் கீழ் பூட்டுதல் மற்றும் தடுப்பூசி செயல்முறைகளின் போது ஒழுங்கைப் பேணுவதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும், இவ் அணுகுமுறை “உள்ளூர் மட்டத்தில் கிராம மக்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் பற்றாக்குறை” மற்றும் “நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் முரண்பாடு” மற்றும் பிற செயல்முறைகளுக்கு வழிவகுத்தது.
அதன்படி, ஆரம்பத்தில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செயலூக்கமான, கடுமையான மற்றும் பரவலாக்கப்பட்ட முறையில் இருந்தமை பாராட்டப்பட்டிருப்பினும், பௌதீக, மனித மற்றும் தகவல் வளங்களின் பற்றாக்குறை, அரசாங்கத்தின் முடிவெடுப்பதில் சீரான தன்மையின்மை, அவசரகால நிவாரணத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் குறுகிய கால நோக்குநிலை மற்றும் இராணுவமயமாக்கல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கவலைகள் , இலங்கையில் அத்தகைய ஆயத்தத்தை வழிநடத்துவதற்கான தேசிய கட்டமைப்பொன்று இல்லாமையும் தொற்றுநோய்களுக்கான ஆயத்தமின்மையை சுட்டிக்காட்டுகிறது.
Penned by Rtr. Farhath Rhysa

Translated to Sinhala by Rtr. Yuresha Perera
Translated to Tamil by Rtr. Lakshiya Yogarathnam